அடுத்த ரெய்டு எப்போன்னு என் பொண்ணு கேட்குறா : சோகத்தில் முன்னாள் அமைச்சர்
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனை
இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் வீடு உள்பட 13 இடங்களில், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணியின் வீடு அலுவலகம் உள்பட 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் ,நான் குடியிருக்கிறது அப்பார்ட்மெண்ட் 3 அறைகள், ஒரு ஹால், 2000 ஸ்கொயர் ஃபீட். 12 மணி நேரம் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஒரு முழுமையான அரசு இயந்திரத்தை எத்தனையோ மக்கள் பிரச்சனையையெல்லாம் மறந்துவிட்டு ஒரு தனிப்பட்ட நபரின் மீது கொண்ட காட்டத்தால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடந்ததாக கருதுகிறேன்.

இதில் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏற்கனவே இதே போன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை நான் எதிர் கொண்டிருக்கிறேன். திரும்பவும் 2வது முறையாக சோதனையின் நடைபெற்றுள்ளது. நான் செய்தியாளர்களை சந்திக்க வரும்போது எனது வீட்டில் இருந்து 129 ஆவணங்கள் கிடைத்ததாக தொலைக்காட்சியில் சொன்னார்கள்.
ரிட்டன் காப்பியில் எதுவுமே இல்லை
ஆனால், கொடுத்த ரிட்டன் காப்பியில் எதுவுமே கைப்பற்ற முடியாமல் கடைசியாக என்கிட்ட இருந்த 2 மொபைல் போனை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று உள்ளார்கள். என்னுடைய ஆதார் கார்டு, மனைவியின் ஆதார் கார்டு, குழந்தைகளின் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் என முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அடுத்து எப்போ சார் வரப்போறீங்கன்னு
போகும்போது கூட என் பொண்ணு கேஷுவலாக கேட்டாள் 'அடுத்து எப்போ சார் வரப்போறீங்கன்னு' அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கக்கூடிய நேரத்தில் மூன்று ரூமையும், ஒரு ஹாலையும் சோதனை செய்வதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது என்றார்.
யுத்தக்காலத்தில் கூட மதஸ்தலங்களில் புலிகள் கை வைக்கவில்லை: அமைச்சரை கண்டித்த சாணக்கியன் எம்.பி IBC Tamil
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil