காற்றில் ஊழல் செய்பவர்கள் திமுகவினர்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

dmk air corruption Kadambur Raju
By Jon Mar 24, 2021 03:44 PM GMT
Report

காற்றில் கூட ஊழல் செய்பவர்கள் தான் திமுகவினர். தமிழகத்தில் அவர்கள் ஆட்சி அமைந்தால், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை தான் இருக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ மேலப்பாண்டவர்மங்கலத்தில், பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அமைச்சர் கோவில்பட்டி தொகுதி மக்களுக்கு 10 ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளேன் என கூறினார். மேலும், காற்றில் கூட ஊழல் செய்பவர்கள் தான் திமுகவினர்.

தமிழகத்தில் அவர்கள் ஆட்சி அமைந்தால், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை தான் இருக்கும். அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டும் தன, மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். ஆகவே தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.