யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே ஆக வேண்டும் : ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
அண்ணாமலையாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே ஆக வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார்
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குரல் பதிவு தொடர்பான விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை எனக் கூறினார்.
தமிழ்தாய் வாழ்த்து விவகாரம்
அதன் பின்பு தொடட்ந்து பேசிய ஜெயக்குமார் அண்ணாமலையாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே ஆக வேண்டும், கர்நாடகாவில் நடைபெற்ற அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதித்தது குறித்து கருத்து தெரிவித்தார். மேலும், கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியது மிகவும் தவறு. இதனை யாரும் ஏற்கமாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

பதிலடி கொடுப்பொம்
மேலும் அதிமுக விமர்சித்தால் நாங்களும் பதிலடிகொடுப்போம் என கூறிய ஜெயக்குமார் அதிமுக குறித்து விமர்சனம் செய்யும் பாஜக நிரவாகிகளை அண்ணாமலை கண்டிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.