கங்கையில் மிதக்கும் பி்ணங்கள் ... மாறிமாறி குறை கூறிக் கொள்ளும் மாநில அரசுகள்..அச்சத்தில் மக்கள்!

people corpses ganges
By Irumporai May 10, 2021 04:24 PM GMT
Report

பிஹார் மாநிலத்தில் உள்ள பக்சார் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதால் அங்கு நோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநில எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள நகரம் சவுஸா. இது பிஹாரில் இருந்தாலும் உ.பி. எல்லை அருகே அமைந்துள்ளது.

இந்த நகரின் வழியாகக் கங்கை நதி செல்கிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் இன்று காலை(10.5.2021) 40க்கும் மேற்பட்ட பிணங்கள் தண்ணீரில் மிதந்தன. இதனைப் பார்த்த கிராமவாசிகள் பயந்து போய் உள்ளனர்.

இது குறித்து சவுசா அரசுத்துறைஅதிகாரி கூறும்போது: காலையில் சவுசா பகுதியில் 40 முதல் 45 சடலங்கள் மிதந்தன.

ஆற்றில் 100 சடலங்கள் கூட இருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். சடலங்கள் எல்லாம் உப்பியுள்ளன. இவை எங்கிருந்து வந்தன என்பது குறித்து விசாரிக்க உள்ளோம் எனக் கூறினார்.

உ.பி.,யின் பராயிச், வாரணாசி அல்லது அலகாபாத்தில் இருந்தே இந்த பிணங்கள் வந்திருக்க வேண்டும். ஏனெனில் பிஹாரில் சடலங்களை நதியில் வீசும் பழக்கமில்லை. மேலும், அவை கொரோனாவால் உயிரிழந்தோர் சடலமா என்ற சந்தேகமும் உள்ளது. அதனால், கிராமவாசிகள் அச்சத்தில் இருப்பதாக கூறினார்.

ஆற்றில் மிதக்கும் சடலங்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தது அல்ல என்று உபி அரசு சத்தியம் செய்து வருகிறது.

ஆனால், உ.பி காங்கிரஸ் கட்சியினரோ கொரோனா மரணங்களை மறைப்பதற்காக மாநில அரசு சடலங்களை ஆற்றில் வீசிவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆற்றில் மிதக்கும் பிணங்களால் நோய் வருமோ என்ற பயமும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பிணங்களா? என்ற பயமும் மக்களை வதைத்து வருகின்றன.