காய்ச்சல், தலைவலி கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா தொற்று பரவி வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காய்ச்சல், தலைவலிஅறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என கூறினார்.
எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா தொற்று பரவி வருகிறது என்றார் மேலும்,ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 95-க்கும் கீழ் குறைந்தால் கவனமாக இருக்க வேண்டும் எனவும்,தன்னார்வலர்கள் கணக்கெடுப்புக்கு வரும்போது கூச்சம் இல்லாமல் அவர்களை பணி செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.
தற்போது சென்னையில் 50 காய்ச்சல் முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும் 2-3 நாட்களில் 400 ஆக அவை அதிகரிக்கப்படும் என கூறிய பிரகாஷ்.
72 லட்சம் பேரில் இதுவரை 9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரவேண்டும் என அறிவுறுத்தினார்.