கொரோனா வைரஸை சீனாதான் உருவாக்கியது மீண்டும் வம்பிழுக்கும் அமெரிக்கா!

usa coronavirus leaked chinalab
By Irumporai Aug 03, 2021 06:38 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்க குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசினை சீனாதான் உருவாகியது என அமெர்க்கா சீனா மீது தொடர்ந்து குற்றாச்சாட்டினை முன்வைத்து வருகின்றது, அமெரிக்காவின் குற்றச்சாட்டினை சீனா தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அமெரிக்க அதிபா் பைடன் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில், குடியரசுக் கட்சி எம்.பி. மைக் மெக்கால் தலைமையிலான அக்கட்சி எம்.பி.க்கள் ஓா் ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டனா். அதில், வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் 2019, செப்டம்பா் 12-ஆம் தேதிக்கு முன்னரே இது நடந்திருக்கலாம் என இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

குடியரசுக்கட்சியின் அறிக்கையை அமெரிக்காவின் உளவுத்துறை உறுதிப்படுத்தும் பட்சத்திலேயே இதன் அடுத்தகட்டம் என்னவென்பது தெரிய வரும். மரபணு மாற்றியமைக்கப்பட்ட, மனிதர்களால் உருவான வைரஸாக கொரோனா இருக்கும்பட்சத்தில் இதுகுறித்து சர்வதேச விசாரணையை சீனா எதிர்கொள்ள நேரிடும். பொருளாதாரத்தடை உள்ளிட்ட பல சங்கடங்களையும் சீனா சந்திக்கலாம்.