என்னது கொரோனா 20,000 வருஷத்துக்கு முன்னாடியே இருந்துச்சா? வெளியான அதிர்ச்சி தகவல்!

coronavirus epidemic 20000yearsago
By Irumporai Jun 28, 2021 08:58 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் இருந்ததாகவும், அது மாற்றமடைந்து வருவதாகவும் கரண்ட் பயாலஜி என்ற ஆய்வு இதழ் ஒன்று கட்டுரையை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது உருமாற்றடைந்த கொரோனா மேலும் தீவிரமாக பரவி வருவதால்  கொரோனா பற்றிய ஆய்வுகள் உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள  செய்தியில்கரண்ட் பயாலஜி என்ற ஆய்வு இதழில் வெளிவந்த கட்டுரை வெளியிட்டுள்ளது.

அந்த கட்டுரை செய்திதான் தான் தற்போதுஉலகம் முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது. அந்த கட்டுரையில் கொரோனா வைரஸ் இப்போது அல்ல, 20,000 ஆண்டுகளுக்கு முன்பே  சீனா ஜப்பான் வடகொரியா தென்கொரியா போன்ற மேற்கு ஆசிய நாடுகளில் அது பரவியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வைரஸ்கள் தான் மாற்றமடைந்து தற்போது  கொரோனா வைரஸாக மாறியிருக்கலாம என அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது..