உருமாறிய கொரோனா வேகமாக பரவும், அலட்சியம் வேண்டாம்: அரசு எச்சரிக்கை
பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியதிலிருந்து உலகம் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் தற்போது வரை பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களில் 30-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா வகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு புதிய வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட பரவல் வராமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
புதிய வகை கொரோனா மாதிரிகளை தொடர்ந்து கண்காணித்து பரிசோதித்தும் வருகிறது அரசு. உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது.
அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.