உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் கொரோனா பரவ வாய்ப்பாக அமைந்துவிடும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை !
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் காரணமாக அமைந்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதாக இருந்தது.
ஆனால், தொகுதிகளை மறுசீரமைக்கவில்லை என்று வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
ஆனால், நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை.தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது
அதில் , தமிழகத்தில் தற்போது, கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது.
மேலும், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டால், கொரோனா மேலும் பரவ காரணமாக அமைந்துவிடும்,
ஆகவே,உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வெளியான பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.