கொரோனா 2ம் அலை - தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? அதிர்ச்சி தகவல்
2019ம் ஆண்டு சீனாவின் உஹான் மாநிலத்தில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடு முழுவதும் பரவி பல உயிர்களை பறித்தது. பின்னர் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்தியாவிலும் கூட கடந்த சில மாதங்களாக கொரோனாவின் தீவிரம் குறைந்தது. இதனால் மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில், தற்போது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு திடீரென மீண்டும் அதிகரித்து வருகிறது.
எனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்திருக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் முழு நேர ஊரடங்கும் அமலுக்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஒரே நாளில் 85.95% சதவீதம் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
இந்நிலையில் பொதுமக்கள் தனி மனித இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் மாதத்திற்கு முன்பு வரை 500-க்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, திடீரென அதிகரித்து வருகிறது. இதனால், புதிய கட்டுப்பாடுகளை அரசு தற்போது விதித்திருக்கிறது. அதாவது 3-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருந்தாலே, அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
முகக்கவசம் அணியாதவர்கள் மீதும், தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் மீதும் உடனடியாக அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகளை மூட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாலும், தேர்தல் பணிகள் நடைபெறுவதாலும், தேர்தல் முடியும் வரை மீண்டும் பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஆசிரியர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.