கொரோனா உள்ளவர்கள் வெளியே சுற்றினால் ரூ 2000 அபராதம் -சென்னை மாநகராட்சி அதிரடி

covid19 corona tamilnadu corporation fine
By Irumporai May 18, 2021 12:39 PM GMT
Report

கொரனோ தொற்று ஏற்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால் 2000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதில் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்கள் அடிக்கடி வெளியே வருவதாக புகார்கள் வந்தன.

இந்த நிலையில்   கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சுற்றினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

சென்னை மநாகராட்சி வெளியிட்டுள்ள தகவலின் படி:. 

கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சுற்றினால் முதல் தடகையாக ரூ.2000/- அபராதுமாக விதிக்கப்படும் .

இரண்டாவது தடவை மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவது கண்டறியப்பட்டால் அவர்களை பெருநகர சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் (COVID CARE CENTRE) தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொறால்  தனிமைப்படுத்தப்பட்டவர்களை பூர்த்தி  செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியால் 2000க்கும் மேற்பட்ட முன்கள தன்னார்வலர்கள்  பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும்  கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின்  குடும்பத்தார் குறித்த விவரங்களை அருகாமையில் வசிப்பவர்கள் மற்றும் ஏனையோர் 044-25384520 என்ற தொலைபேசி எண்ணில் புகாராக அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.