கொரோனா தடுப்பு மருந்துகளை சாப்பிட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு - அதிர்ச்சியில் மருத்துவ உலகம் ..
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள், பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் .
பாக்ஸ்லோவிட் மாத்திரை
கொரோனா பெருந்தொற்றை தடுக்க உலக நிறுவனங்கள் தடுப்பு ஊசிகள் ,மாத்திரைகள் என புதிது புதிதாக நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன .
இதை போன்றே அமெரிக்க முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான பைசர் ,கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் பாக்ஸ்லோவிட் என்ற பெயரில் கொரோனா தடுப்பு மாத்திரையை அறிமுகப்படுத்தியது .

இந்த மாத்திரை உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது . கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு 30 பாக்ஸ்லோவிட் மாத்திரை வழங்கப்படுகிறது .இந்த 30 மாத்திரைகளின் விலை ரூ .46000 ஆகும் .ஆரம்ப காலத்தில் பாக்ஸ்லோவிட் மாத்திரை நல்ல பலன் அளிப்பதாக தகவல்கள் வெளியாகின .
அமெரிக்க விஞ்ஞானிகள் அறிக்கை
இந்த சூழ்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த யூனிவர்சிட்டி ஆப் மினசோட்டா மற்றும் யூனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா சான் டியாகோவை சேர்ந்த விஞ்ஞானிகள்,பாக்ஸ்லோவிட் மாத்திரை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் .
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கிறது .பாக்ஸ்லோவிட் மாத்திரைகளை எதிர்க்கும் வீரியத்தை கொரோனா வைரஸ் பெற்றிருக்கிறது .உலகின் பல பகுதிகளை சேர்ந்த நோயாளிகளை ஆய்வு செய்த போது இது உறுதியானது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் .
எச்ஐவி, ஹெபாடிடிஸ் சி வைரஸ் சிகிச்சைக்கு தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்துகளை பயன்படுத்தி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் . என ஆய்வறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த அறிக்கை உலக மக்களிடையே கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்த நம்பிக்கையை இழக்க செய்கிறது .