கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு இதைச் செய்யக்கூடாது.! விஜய்பாஸ்கர் எச்சரிக்கை

vijaybaskar corona tamilnadu
By Jon Jan 13, 2021 11:26 AM GMT
Report

கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் வரும் 16ம் தேதி முதல் போடப்பட உள்ளது. இத்திட்டத்தை மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்.

இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசி அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதன்படி, இன்று திருச்சியிலிருந்து 9 சுகாதார மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ”கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. 2வது டோஸ் போடும் வரையிலும் 28 நாட்களுக்கு மது அருந்த கூடாது. எந்த ஒரு அச்சமும் இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தப்பட்டதும் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என பொதுமக்கள் எண்ணிவிடக் கூடாது.

தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம். தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் நானும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வேன்,' என்றார்.