கொரோனாவை பரப்பியது மனிதனா - சீன விஞ்ஞானி வெளியிட்ட பரபரப்பு தகவல்!
கொரோனா வைரஸ் பரவியது குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல்
கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ”வுஹான் சந்தையிலிருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் (இந்தப் பரிசோதனையில் ரக்கூன் நாய்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன)
அவை காட்டு விலங்குகளின் மரப்பணுகளை கொண்டிருந்தது தெரிய வந்தது. இதன்மூலம் கொரோனா வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது” என்று தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சி தகவல்
இதன் மூலம் வுஹான் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியது என்பதை உறுதி செய்வதற்கான சான்றுகள் கூடுதலாகியுள்ளன. இந்நிலையில், பெய்ஜிங் ரசாயன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டோங் யிகாங் கூறுகையில்,
வுஹானில் உள்ள ஹுவான் கடல் உணவு சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரிகளின் மரபணு வரிசைகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மரபணு வரிசைகளுடன் கிட்டத்தட்ட ஒத்ததாக உள்ளன. இதனால் மனிதர்களிடமிருந்து கொரோனா தோன்றியிருக்கலாம் எனக் கூறுகிறார்.
எனவே, இன்னும் கொரோனாவின் தோற்றம் பற்றிய கண்டறிதலோ, அதனை பற்றிய முழுமையான புரிதலோ இல்லாத நிலை தான் நீடித்து வருகிறது.
உலக நாடுகளை 3 ஆண்டுகளாக பாதிப்பிற்கு உள்ளாக்கிய கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் பல நாடுகளில் இன்னும் குறையாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் கொரோனா தலை தூக்கி உள்ளது.