கொரோனா தொற்றின் புது மாறுபாடு; தடுப்பூசியை தீவிரப்படுத்தும் நாடு - அதிர்ச்சி தகவல்!

COVID-19 COVID-19 Vaccine England World
By Jiyath Sep 12, 2023 07:24 AM GMT
Report

கொரோனா புது மாறுபாடு

கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து இப்போதுதான் உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் அடுத்த மாறுபாடு (BA.2.86) பரவுவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை கண்டறிந்தது.

கொரோனா தொற்றின் புது மாறுபாடு; தடுப்பூசியை தீவிரப்படுத்தும் நாடு - அதிர்ச்சி தகவல்! | Corona Virus New Variant In England Uk

இரண்டு தினங்களுக்கு முன் இங்கிலாந்தின் நார்போல்க் பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லம் ஒன்றில் வசித்து வந்த 38 பேரில் 33 பேருக்கு இந்த புது தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் இதுவரை இந்த தோற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதனையடுத்து குளிர்காலத்தில் எளிதாக வைரஸ் தொற்றால் பாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இங்கிலாந்து நாட்டு சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்றின் புது மாறுபாடு; தடுப்பூசியை தீவிரப்படுத்தும் நாடு - அதிர்ச்சி தகவல்! | Corona Virus New Variant In England Uk

மேலும் முதியோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கும், வீட்டிலேயே இருந்து வருபவர்களுக்கும் இந்த வாரத்தில் இருந்தும், அதிக பாதிப்புக்குள்ளாக கூடிய மற்றவர்களுக்கு அக்டோபர் மாதத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய சுகாதார அமைப்பு

இதுகுறித்து இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை அமைப்பின் தடுப்பூசி திட்ட இயக்குநர் டாக்டர். ஸ்டீவ் ரஸ்ஸல் கூறியதாவது "வைரஸின் புது மாறுபாடு குறித்து பரவும் கவலை கொள்ள செய்யும் தகவல்களால், தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் தாங்களாகவே அதனைச் செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் புது மாறுபாடு; தடுப்பூசியை தீவிரப்படுத்தும் நாடு - அதிர்ச்சி தகவல்! | Corona Virus New Variant In England Uk

மேலும், வயதானவர்களும், நோய் தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடியவர்களும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்கு தள்ளப்படாமல் இருக்க தடுப்பூசி சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. எனவே, அப்படிப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தங்களின் அன்புக்குரியவர்களையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்" என இங்கிலாந்து நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு சக்தித்துறை தலைவர் டாக்டர். மேரி ராம்சே கூறியுள்ளார்.