மக்களே சூப்பர் நியூஸ்... கொரோன வைரஸை வேறோடு அழிக்க வேப்பிலை சாறுக்கு சக்தி உள்ளதாம் - IISER தகவல்
நமது நாட்டில் பல மரங்கள் உள்ளன. ஆனால், அதில் சில மரங்கள் மட்டும்தான் மருத்துவ தன்மை கொண்டதாக இருக்கும். அந்த வகையில், இந்திய நாட்டிற்கேயுரிய ஒரு மரம் தான் என்றால் அது வேப்ப மரம் தான்.
பண்டைய நாட்களில் இந்தியாவிற்கு வருகை தந்த கிரேக்கர்கள் வேப்ப மரத்தின் மருத்துவ குணங்களை போற்றி தங்கள் நாட்டின் குறிப்புகளில் எழுதியுள்ளனர். வேப்ப மரத்தின் பட்டை, இலைகள், விதைகள், வேர்கள், பூக்கள் மற்றும் பழங்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் மிக்கவை.
இதன் இலைகளில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் உள்ளன.
இந்நிலையில், கொரோனா வைரஸை அழிக்கும் திறன் வேப்ப மரத்தின் சாறுக்கு உள்ளது என்று ஒரு ஆராய்ச்சியில் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (IISER) ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -
வேப்ப மர பட்டை சாற்றினை விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில், அதில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. வேப்பமர பட்டை சாற்றினை மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம்.
மேலும், வேப்ப மரப்பட்டை சாறு கொரோனா வைரஸ் நுழைவை தடுக்கிறது. நோய் தொற்றுக்கு பிறகும் கூட வைரஸ் நகல் எடுப்பதையும், பரவலையும் குறைக்கிறது.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.