தமிழகத்துக்கு 5.56 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்

india virus corona
By Jon Jan 12, 2021 08:12 AM GMT
Report

தமிழகத்துக்கு இன்று காலை 11 மணிக்கு 5.56 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை வழங்க மத்திய அரசு மடிவு செய்தது. இந்த தடுப்பூசிக்கான விலை ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,

வருகிற 16ம் தேதி முதல் தடுப்பூசி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு 5.56 டோஸ் தடுப்பூசிகள் புனேவில் இருந்து விமானம் மூலும் தமிழகம் வரவுள்ளன. இதுகுறித்து சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், புனேவில் இருந்து விமானத்தில் 5,56,500 கரோனா தடுப்பூசிகள் இன்று (12/01/2021) காலை 10.30 மணிக்கு சென்னைக்கு வருகிறது.

5 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 'சீரம்' நிறுவனத்திடம் இருந்து வருகின்றன. 'பாரத் பயோ டெக்' நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வருகின்றன. ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் இரண்டு முறை தடுப்பூசி போடப்படும்.

கோவிஷீல்டு, கோவாக்சினை யார் யாருக்குப் போடுவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும்

. தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது" என தெரிவித்துள்ளார்.