கொரோனா வைரஸ் எங்கள் நாட்டிலிருந்து பரவவில்லை .. ஆதாரத்தை வெளியிடும் சீன விஞ்ஞானி!

corona china
By Irumporai Jun 15, 2021 12:24 PM GMT
Report

 சீனாவின் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் உலகுக்குப் பரவியது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இங்குள்ள வைரஸ் பரிசோதனைக் கூடத்தில் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட வவ்வால் இறகு சாம்பல் கழிவில் கலந்து அது அருகிலிருந்த இறைச்சி மார்க்கெட்டுக்கு சென்று அதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.

இதனை லேப் லீக் தியரி என அமெரிக்கா இந்த கோட்பாட்டை சிலர் ஏற்றுக் கொள்கின்றனர். மற்ற சிலரோ மறுக்கின்றனர்கொரோனா பரவத்தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டன ஆனால் இன்னமும் வூஹான் பரிசோதனைக் கூடத்தில் உலக சுகாதார அமைப்பு தொடங்கி பல விஞ்ஞானிகள் வைரஸ் எவ்வாறு வெளியானது என்று ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆராய்ச்சியை நீட்டிக்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. லேப் லீக் தியரியை சீன விஞ்ஞானிகள் சிலர் மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பெண் விஞ்ஞானியும், வூஹான் உயிரியல் ஆய்வகத்தில் பணியாற்றும் ஜி ஷெங்க்லி அமெரிக்க இதழான நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில்

கொரோனா வைரஸ் எங்கள் நாட்டிலிருந்து பரவவில்லை .. ஆதாரத்தை வெளியிடும் சீன விஞ்ஞானி! | Corona Virus Chinese Scientistevidence

வூகான் பரிசோதனை மையத்தில் இருந்து கொரோனா பரவியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் வூஹான் பரிசோதனைக் கூடம் சீன அரசு p4 தரச் சான்றிதழ் உள்ளது பரிசோதனைக் கூடங்களில் அதீத சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கடைப்பிடிக்கப்பட்டால்தான் இந்த சான்றிதழைப் பெற முடியும். கடந்த 2018ஆம் ஆண்டு 42 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வூஹான் பரிசோதனைக் கூடம் கட்டப்பட்டது இங்கு பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு கவச உடை, மாஸ்க் உள்ளிட்ட பல கட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு மிகப் பாதுகாப்பாக அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் விஞ்ஞானிகளின் அஜாக்கிரதை காரணமாக இந்த பரிசோதனை கூடத்தில் இருந்த வவ்வால் இறகு சாம்பிள் கழிவில் கலக்க வாய்ப்பே இல்லை என்வும் ஜி ஷெங்க்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸின் ஜீன் மாதிரி வூஹான் பரிசோதனைக் கூடத்தின் சாம்பள்களின் மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் உலக நாடுகளுக்கு சீனாவின் மீதான சந்தேகம் வளர்ந்து கொண்டுதான் உள்ளது.