தமிழகத்தில் குறைகிறதா கொரோனா பதிப்பு?
தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 075 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை மிகவேகமாகபரவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 33, 075 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நேற்றைய பாதிப்பை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இதுவரை தமிழகத்தில் 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 ஆயிரத்து 486 பேர் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை காணமுடிகிறது:
3 நாட்களாக கொரோனா நிலவரம் :
15/05/2021 - 33658
16/05/2021 - 33181
17/05/2021 - 33075