குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை-சீரம் நிறுவனம் அறிவிப்பு

children coronavaccine serum
By Irumporai Jun 17, 2021 01:52 PM GMT
Report

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க  தடுப்பூசி போடும் பணி விரைவாக நடந்து வருகிறது.

இந்த நிலையில்இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

தற்போது  கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் குழந்தைகளுக்காக நோவாவாக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

இதனை வருகிற ஜூலை மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு பரிசோதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.