கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு கிடையாது - மாநகராட்சி ஆணையர் பேட்டி

covid vaccine india people tamilnadu
By Jon Mar 18, 2021 03:02 PM GMT
Report

கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசுகையில், ”சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியமாகும். சென்னையில் சராசரியாக 350க்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுவதால் பக்கவிளைவுகள் எதுவும் வருவதற்கு வாய்ப்பு இல்லை தமிழகத்தில் சென்னையில் 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. சென்னையில் லாக்டவுன் போடப்படும் என்ற தகவலில் உண்மை கிடையாது. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.