இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: முன்கூட்டியே கணித்தாரா ராகுல் காந்தி?

covid vaccine rahul gandhi congress
By Jon Apr 08, 2021 04:54 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினசரி 1 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்த நிலை இனிவரும் நாட்களில் மேலும் மோசமடையும் என்றும் கொரோனாவின் இரண்டாம் அலை மே மாத இறுதி வரை நீடிக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில் மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 9 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 கோடி வரை கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: முன்கூட்டியே கணித்தாரா ராகுல் காந்தி? | Corona Vaccine Shortage India Rahul Gandhi Predict

ஆனால் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் சில தினங்களில் கொரோனா தடுப்பூசி முடிவடைந்துவிடும் நிலை உள்ளது. இதனால் மத்திய அரசு விரைந்து கொரோனா தடுப்பூசிகளை அனுப்பிவைக்க வேண்டும் என்றும் தட்டுப்பாடு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசு இதனை மறுத்துள்ளது. மத்திய அரசு கொரோனாவை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே ராகுல் காந்தி முன்கூட்டியே எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்தி பதிவு செய்திருந்த ட்வீட் ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் இந்திய அரசு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு மற்றும் வழங்குவது பற்றி தெளிவான திட்டமிடல் வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதில், “இந்தியா கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் முக்கிய பங்காற்றும்.

இதனால் தடுப்பூசி தயாரித்து, சமமாக அனைவரையும் உள்ளடக்கிய விதத்தில் வழங்குவதற்கான தெளிவான செயல்திட்டம் வேண்டும். இதனை இந்திய அரசு உடனே செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.