நடிகர் விவேக் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது - மருத்துவமனை விளக்கம்

mohanelango
in பொழுதுபோக்குReport this article
தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விவேக் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் விவேக் நேற்று தான் கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தார். மேலும் மக்கள் முன்வந்து கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தடுப்பூசியால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவத் தொடங்கின.
நடிகர் விவேக் உடல்நிலை தொடர்பாக மருத்துவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பதிலளித்தனர். அப்போது, “நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கும் தொடர்பில்லை.
அவரின் உடல் நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன” என்றுள்ளனர்.