நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

நடிகர் விவேக் இறப்பிற்கும், கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் தினந்தோறும் 7000க்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதியாகிவருகிறது.

இந்நிலையில் 2வது அலையை கட்டுக்குள் கொண்டுவர சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே தடுப்பூசி போட்ட அடுத்த நாளை விவேக் மரணமடைந்தது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நடிகர் விவேக்கின் இழப்பு பெரிய இழப்பாகும், இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.

12 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, தினமும் 20 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்