மாராடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா ? - விளக்கம் கொடுத்த மத்திய அரசு

COVID-19 COVID-19 Vaccine
By Irumporai 2 வாரங்கள் முன்
Report

மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய சுகாதாரத்துறை மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது.

  கொரோனா பரவல்

கொரோனா பரவலுக்கு பிறகு நாட்டில் மாரடைப்பு அதிகரித்துள்ள நிலையில் இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசிதான் என செய்திகள் வெளியாகின , ஆகவே கொரோனா தடுப்பூசிதான் தற்போதைய மாரடைப்பு அதிகரித்தமைக்கு காரணமா என நாடாளுமன்ற மக்களவையில் ஜனதா தள எம்பி ராஜூவ் ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பியிருந்தார்.

 மாரடைப்பு பதில் :

இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் எழுத்துபூர்வ பதிலலித்துள்ளார் அதில் , கொரோனாவுக்கு பிறகுதான் மாரடைப்பு அதிகரித்துள்ளது என்பதற்கு எந்த வித அறிவியல்பூரவ உண்மையும் இல்லை என கூறியுள்ளர்.

தடுப்பூசி காரணமல்ல

மேலும், மாரடைப்பு ஏற்படுவதற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல எனவும் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார். 

 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.