34- மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை.. சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நிலைமையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறினார்
மேலும், 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என தெரிவித்த ராதாகிருஷ்ணன் .
வரும் 13ம் தேதி 6.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வர உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறினார்.
ஸ்புட்னிக் தடுப்பூசியை வாங்கி பொதுமக்களுக்கு செலுத்துவது தொடர்பாக அரசிடம் விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனகூறினார்.