உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி: மு.க.ஸ்டாலின் உத்தரவு
உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி டெண்டர் மூலமாக தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்கத்தில் 18 வயதுக்கு மேற்பட்டபோதிய அளவு தடுப்பூசி இல்லாததால், தடுப்பூசி இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழக முதலவர் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி, 18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு போடுவதற்கு போதுமானதாக இல்லை.
ஆகவே , உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி டெண்டர் மூலமாக தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்திற்கு மத்திய அரசால் ஆக்ஸிஜன் அளவு உயர்த்தப்பட்டாலும், தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.
தமிழகத்தில் போதிய அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுகளை அமைக்கவும், பிற தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் விநியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.