கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடையில்லை

covid vaccine india world
By Jon Mar 26, 2021 02:33 PM GMT
Report

கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘வேக்சின் மைத்ரி’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தநிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தடுப்பூசிகளுக்கான உள்நாட்டு தேவை வெகுவாக அதிகரிக்கும் என்பதால் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் இது குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதிக்க வில்லை. நட்பு நாடுகளுக்கு தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.