கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கூலி தொழிலாளி மரணம்
திருநெல்வேலியில் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி டவுன் கூழக்கடை பஜார் பகுதியை சார்ந்தவர் முத்து கிருஷ்ணன் (வயது 45). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மருத்துவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்திய நிலையில், கடந்த 8 ஆம் தேதி முத்துகிருஷ்ணனுக்கு முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக முத்து கிருஷ்ணனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை IBC Tamil