130 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அறவே கிடைக்கவில்லை: ஐ.நா பொதுச் செயலாளர் கவலை

russia usa Antonio
By Jon Feb 18, 2021 04:26 PM GMT
Report

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டுகள் ஆன பிறகும் அதன் தாக்கம் குறையாமல் வீரியமாக பரவி வருகிறது. அதே சமயம் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி வழங்கத் தொடங்கிவிட்டன. ஆனால் பணக்கார நாடுகளே பெரும்பாலான தடுப்பூசிகளை வாங்கிக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி 130 நாடுகளுக்கு அறவே கிடைக்கவில்லை என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ கவலை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டறியப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோ வேக்சின் என இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி கண்டறியாத சில நாடுகளுக்கு கண்டறிந்த நாடுகள் உதவியும் வருகின்றன. ஆனால் அவை போதுமானதாக இல்லை. இந்நிலையில் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ அவர்கள் இது குறித்து விமர்சித்துள்ளார். அதாவது கொரோனா தடுப்பூசி 130 நாடுகளுக்கு ஒரு டோஸ் கூட கிடைக்காமல் இருக்கிறது எனவும், 75% கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை 10 நாடுகளுக்கு நாடுகள் மட்டுமே வழங்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற கடினமான காலகட்டத்தில் அனைவர்க்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.