மூளை, இதயத்தில் பாதிப்பு; கொரோனா வேக்சினால் அபாயம் - ஆய்வில் ஷாக் தகவல்!
கொரோனா வேக்சின் செலுத்திக்கொண்ட நோயளிகளிடையே சில பக்கவிளைவுகள் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா :
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒட்டுமொத்த உலகத்தையே முடக்கிய ஒரு பெருந்தொற்று என்றால் அது கொரோனா தான். உலக அளவில் பல கோடி உயிர்களை பலி வாங்கிய இந்த கொரோனா மீதான பயம் இன்றளவும் மக்களிடையே தனியவில்லை என்றே கூறலாம்.
இதனையடுத்து, அந்த தொற்றை தடுக்க மக்களுக்கு தடுப்பூசிகள் உட்படுத்தப்பட்டதற்கு பிறகு தான் அந்த நோயின் தாக்கம் சற்று குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஷாக்கிங் தகவல்:
இந்நிலையில் வாஷிங்டனில் கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ளும் போது அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து சுமார் 9.9 கோடி பேரிடம் ஆய்வை மேற்கொண்டனர்.
அதில் குய்லின் பார்ரே சிண்ட்ரோம், மயோர்கார்டிடிஸ், பெரிகார்டிடிஸ் மற்றும் செரிப்ரல் வெனஸ் சைனஸ் த்ரோம்போசிஸ் ஆகிய பாதிப்புகள் 1.5 மடங்கு அதிகமாக ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக தடுப்பூசி என்பது சில ஆண்டு காலம் ஆய்வுக்கு பிறகு தான் மனிதர்களுக்கு செலுத்துவார்கள். ஆனால் கொரோன தடுப்பூசி அப்படியல்லாமல் வெகு சில மாதங்களிலே மக்களுக்கு உட்படுத்தப்பட்டது. இதன் காரணமாக உலக நாடுகளில் ஏற்படும் பக்க விளைவுகளின் அளவு 0.2 முதல் 0.7 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது.
மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை எடுத்துக்கொண்ட 92,000 பேருக்கு 0.009 சதவிகிதம் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருத்துவ ஏஜென்சிகளும் இதுகுறித்து எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.