கொரோனா தடுப்பூசி செலுத்தினால் ரத்தம் உறைகிறதா? ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி தடை செய்யப்படுவது ஏன்?
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தயாரிப்பான ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை பல நாடுகள் தொடர்ந்து தடை செய்து வருகின்றன. ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படுவதாக சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஐரோப்பிய மருந்துவ ஏஜென்ஜியும் உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது.
ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி போட்டுக் கொண்ட நோயாளிகள் பலருக்கு ரத்தம் உறைவதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து சில நாடுகள் அந்த தடுப்பூசி போடும் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி நடத்தி வரும் நிலையில், தடுப்பூசி திட்டத்தை நிறுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 17 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 37 பேர் மட்டுமே ரத்த உறைவு பாதிப்பை எதிர்கொண்டது தெரிய வந்துள்ளதாக ஆஸ்ட்ராசெனீகா கூறியுள்ளது.
இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் அது வரை தடுப்பூசி செலுத்தப்படுவதை நிறுத்த வேண்டாம் என்றும் ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம் தெரிவித்துள்ளது.