கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்டார் திமுக தலைவர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் .
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 9ம் தேதி முதல்டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.இதை தொடர்ந்து, நேற்று இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும். நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்.
இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.