2வது தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டார் திருமாவளவன்
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது வரை 9 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக சுகாதார, முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தற்போது 3ம் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு படிப்படியாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ்-க்கு கால இடைவெளியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியிலுள்ள சூரியா மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதனையடுத்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாவரும் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகிறேன் என்று மக்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், இன்று அவர் 2வது தவணை தடுப்பூசி கோவிஷீல்ட் போட்டுக்கொண்டார்.
#இரண்டாவது_தவணை_தடுப்பூசி கோவிஷீல்ட் போட்டுக்கொண்டேன்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 16, 2021
அரசின் வழிகாட்டுதலின்படி அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குரிய கட்டுப்பாடுகளைக் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.
45வயதைக் கடந்தவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.#SecondDose #Covishield #corona pic.twitter.com/cHCBxWNLav
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அரசின் வழிகாட்டுதலின்படி அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குரிய கட்டுப்பாடுகளைக் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். 45 வயதைக் கடந்தவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.