தமிழகத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட வெளிநாட்டு தம்பதி

Corona Vaccination Chennai
By mohanelango May 27, 2021 11:57 AM GMT
Report

கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் இரண்டாம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட ஐயப்பன்தாங்கல், மௌலிவாக்கம், கோவூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

ஐயப்பன்தாங்கல் அரசு பணிமனை பஸ் நிலையத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் சமூக விலகலோடு அமர்ந்து கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

இதில் வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். ஆர்வமுடன் பொதுமக்கள் அவர்களை பார்த்தனர்.

தமிழகத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட வெளிநாட்டு தம்பதி | Corona Vaccination Speeds Up In Tamilnadu

மேலும் சிறுமி ஒருவர் பெற்றோர் கொடுக்கும் பணத்தை சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்காக அந்த பணத்தை கொடுத்ததாக அந்த சிறுமி தெரிவித்தார்.

சிறுமி கொடுத்த நிவாரண தொகையை அமைச்சர் பெற்றுக்கொண்டார். மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்படும் அத்தியாவசிய மற்ற தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.