சென்னையில் தற்காலிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 15 இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் தற்காலிக 15 இடங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது காரோண பரவல் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் 23,000 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது ஒரு மாத இடைவெளியில் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. அதுவும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் 10,000 க்கும் அதிகமாக பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசிகளும் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வருகிற மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் படி தற்போது சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் தற்காலிகமான 15 மையங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.