ஏப்ரல் 30க்குள் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்படவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக நாள் மட்டும் கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொரோனா பரவல் காரணமாக தமிழக பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வீட்டிலிருந்தபடி நடத்தப்பட்டு வருகின்றன. இது அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வருகிற ஏப்ரல் 30ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தவேண்டும் என பல்லைக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் துரிதமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தடுப்பூசிபோட்டுக்கொள்ள வேண்டும். அதுகுறித்த விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.
கொரோனா தடுப்பு தொடர்பான பணிகளில் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து கல்வி அதிகாரிகள் பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.