நான் தான் அப்பவே சொன்னேல்ல அவங்கதான் காரணம் .. மீண்டும் சீனாவை சீண்டும் டிரம்ப்!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் டிரம்ப் அந்த கூற்றை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக மாறி உலகையே உலுக்கி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவ சீனா காரணம்' என, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்,
இந்த நிலையில் பிரிட்டன், நார்வே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில்கொரோனா வைரஸ் , ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர்களின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், 'சீனா தான் வைரசைப் பரப்பியது என நான் முன்பே தெரிவித்தேன்.

தற்போது எனது 'எதிரிகள் கூட, வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் சீன வைரஸ் பரவியதாக சொல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்த வைரசால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புக்கு சீனா இழப்பீடு தர வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.