இறந்த உடலுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை: புதுவையில் அரங்கேறிய அவலம்

corona puduvai
By Irumporai May 16, 2021 11:24 AM GMT
Report

கொரோனா தொற்றின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அதோடு மருத்துவமனையில் படுக்கை வசதிக்கும் ஆக்சிஜனிற்கும் பற்றாக்குறை உள்ள நிலையினை காண முடிகிறது.

இதனால், நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம் தொடர்கிறது.

இந்த நிலையில் புதுவையில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்த உடலுக்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள கதிர்காமம் என்ற அரசு மருத்துவமனையில் கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட நோயாளி திடீரென உயிரிழந்தார்.

அவரை பிண அறையில் வைக்காமல் இறந்த உடல் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அது மட்டுமின்றி கட்டிலில் இல்லாமல் பலர் தரையில் படுக்க வைத்து சிகிச்சை கொடுப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்கள் நரக வேதனையே இதில் கொரோனாவினால் இறந்தவரின் உடலை அகற்றாமல் அப்படியே சிகிச்சையளிக்கும் இந்த வீடியோ இணையத்தில் பகிரபட்டு கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.