தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அசுர வேகத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய கொரோனா...எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் தெரியுமா?
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாத்திக்கப்பட்டுள்ளதாகவும் 113 பேர் உயிரிழந்துதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாத்திக்கப்பட்டுள்ளதாகவும் 113 பேர் உயிரிழந்துதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இதுகுறித்து தமிழக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலானது,
தமிழகத்தில் இன்று 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 66 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1,15,128 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 16,007 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10, லட்சத்து 37 ஆயிரத்து 582 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 046 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 5,473 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.