சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! உலக நாடுகள் கவலை - மாநிலங்களை அலர்ட் செய்த மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா தொற்று
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு 4000 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வயதானவர்கள் அதிக அளவில் மருத்துவமனையில் சாரைசாரையாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் இதுவரை 5,242 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் அகற்றிய நிலையில் தான் தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹாங்காங் ஆராச்சியாளர்கள் நடத்திய ஆய்வில்,

அடுத்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு 5 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 15 லட்சம் பேர் உயிரிழக்கலாம் என ஆராய்ச்சியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும், இதனால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் நோயாளிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
சீனாவில் தொடர்ந்து கொரோனாவால் வயதானவர்கள் பாதிக்கப்படடு வருகின்றனர். இதையடுத்து இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மத்திய அரசு அறிவித்துள்ளது.