மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உதவிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்.
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகுபவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அவலம் நிலவுகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில் அந்த இயக்கத்தினர் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு) வீரசோழனிடம் வழங்கினர்.
மேலும், கொரோனா நோயாளிகளுக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றையும் அவர்கள் வழங்கினர்.