பிரித்தானியாவில் கொரோனா பரிசோதனை: மக்களுக்கான அதிமுக்கிய தகவல்
பிரித்தானியாவில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவிய நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் குடிமக்கள் அனைவருக்கும் வாரத்திற்கு இருமுறை இலவச பரிசோனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியான நிலையில், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் அனைவருக்கும் ராபிட் விரைவு சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழைய வாழ்வை திரும்ப பெற அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரையிலும் 31.4 லட்சம் பேர் முதல் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.