பிரபல மெட்ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை அனுமதி ரத்து!

corona metal company
By Irumporai May 21, 2021 02:46 PM GMT
Report

பிரபல தனியார் ஆய்வகமான மெட்ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19, 20-ம் தேதிகளில் கொரோனா தொற்று இல்லாத 4,000 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பதாக  தவறாக பதிவேற்றம் செய்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து அடுத்த 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மெட்ஆல் நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.