ஆச்சரியம்...மீன்களுக்கு கொரோனா தொற்று? - மீன், நண்டுகளுக்கு சீனாவில் பரிசோதனை
கடலில் இருந்து பிடித்து வரப்பட்ட மீன்கள் மற்றும் நண்டுகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா என சீனா பரிசோதனை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகத்தை உலுக்கிய கொரோனா தொற்று
கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் எங்கும் வேகமாக பரவியது கொரோனா தொற்று. இந்த நோய் தொற்றால் உலக நாடுகள் பலவும் கடுமையாக முடங்கியது.
இதையடுத்து கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியது.

இதனால் சற்று கொரோனா தொற்று குறைந்துள்ளதால் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றன உலக நாடுகள்.
இதனிடையே கொரோனா தொற்றுக்கு தோன்றியதாக கூறப்படும் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது அந்நாட்டு அரசு.
மீன்களுக்கு கொரோனா பரிசோதனை
இதனிடையே சீனாவின் ஜியாமென் கடற்கரை நகரத்தில் கொரோனா தொற்று மீண்டும் உயர தொடங்கியுள்ளதால்,

கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் கடல் உயிரினங்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மனிதர்களை போன்று மீன்கள் மற்றும் நண்டுகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
Videos of pandemic medical workers giving live seafood PCR tests have gone viral on Chinese social media. pic.twitter.com/C7IJYE7Ses
— South China Morning Post (@SCMPNews) August 18, 2022