எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்... சபாநாயகர் அப்பாவு

mla coronatest appavu
By Irumporai Jun 17, 2021 11:32 AM GMT
Report

கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடர் ஜுன் 21 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை கலைவானர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி அங்கு நடந்து வரும் பணிகளை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் எம்எல்ஏக்கள் அமரவைக்கபடுவார்கள் என கூறினார்.

மேலும் கொரோனா பரிசோதனைக்கு பிறகே எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அப்பாவு தெரிவித்தார்.