சென்னையில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படும்- மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாநகராட்சி முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால், நேற்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநாகராட்சி அதிகாரிகள் பேசுகையில், சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால், மாநகராட்சி முழுவதும் உஷார்படுத்தபட்டுள்ளது.
வீடு வீடாக மீண்டும் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும். தன்னார்வலர்கள் உதவியுடன் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளது என்றார்.