தமிழகத்தில் ஒரேயடியாக எகிறிய கொரோனா பாதிப்பு...இன்று மற்றும் 26 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

corona tamilnadu new cases
By Praveen May 07, 2021 02:43 PM GMT
Report

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 26,465 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இதுவரை மொத பாதிப்பு 13,23,965 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இன்று மட்டும் 197 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 15,171 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படத்தில் சென்னையில் மட்டும் 6,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் 22,381 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை 11,73,439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைக்கு மட்டும் 1,52,812 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 1,35,355 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.