தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: 303 பேர் உயிரிழப்பு
covid19
tamilnadu
By Irumporai
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 33,658 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 303 பேர் உயிரிழந்து உள்ளனர். 20,905 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 64,945 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன.
இதில், 33,658 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,7 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 33,651 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,65,035 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவினால் 125 பேர் தனியார் மருத்துவமனையிலும், 178பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.