தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,969 பேர் பாதிப்பு.. 29 பேர் பலி!

corona tamilnadu
By Irumporai Aug 07, 2021 02:15 PM GMT
Report

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரே நாளில் 1,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இவர்களில் 1,127பேர் ஆண்கள், 842பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 73ஆயிரத்து 352ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 20ஆயிரத்து 286ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 283 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 29பேர் உயிரிழந்துள்ளார்.

7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 22 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 289ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1,839பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 18 ஆயிரத்து 777ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.